இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

33

வ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு பாவங்கள், தசா புக்திக்கேற்ப தொடர்புகொண்டு, சங்கிலித்தொடர்போல் தங்கள் காரகத்திற்குரிய பலனைத் தருகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஜாதகருக்கு ஐந்தாம் பாவாதிபதியின் தசையில், பதினோராம் பாவாதிபதியின் புக்தி நடக்குமேயானால் கொடுப்பினைப் பலனைப் பொருத்து புத்திர பாக்கியம் அமையும். இவ்வாறு ஆராயும்போது பாவங்களின் தொடக்க மற்றும் முடிவுப்புள்ளிகளையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

""அன்பருக்கு அன்பனே! குருவுக்குப் பணிவுடன் பணிவிடை செய்து ஆத்ம தத்துவத்தை உணர்வது ஒவ்வொரு சீடனின் கடமை என்பது போல், ஒரு உத்தம குருவுக்கும் அமையவேண்டிய குணங்களையும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்'' என அன்னை கனகாம்பிகை, திருநெல்வாயில் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் உச்சிநாதேஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.

gandarvanadiஅதற்கு ஆலமர்ச் செல்வன் உரைத்தது- ""ஒரு சீடனுக்கு வித்யா குரு, போதக குரு, தீக்ஷா குரு என்ற மூன்று குருமார்கள் உண்டு. எல்லா குருவுக்கும் நியதி ஒன்றுதான். ஒரு குரு தன் சீடனை குலத்தினால் அடையாளப் படுத்தாமல், குணத்தினால் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். தென்றல், அருவியின் குளிர்ச்சியையும், மலர்களின் நறுமணத்தையும், மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் சுமந்து வந்து தருவதுபோல, தான் கற்றதையும், அனுப வத்தால் பெற்றதையும் குரு தன் சீடர்களுக்கு ஐயம் திரிபறக் கற்பிக்க வேண்டும். புத்திரர் உடலால் செய்யும் பாவங் கள் உடலைத் தந்த பெற்றோரைச் சேர்வதுபோல, சீடர்கள் மனதால் செய்யும் தவறுகள் குருவினையே சாரும்.'' ""உத்தரகோச மங்கைக் கரசே! "அர்த்தஸ்வஸ்திகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், பூசம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்க, மகம் இரண்டாம் பாதத்தில் புதனும், ஸ்வாதி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், திருவோணம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், அஸ்வினி நான் காம் பாதத்தில் சனியும், மிருகசீரிடம் இரண்டாம் பாதத்தில் குருவும் அமை யப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் தயைகூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திரு மறைக்காடு திருத்தலத்தில் அருள்புரியும் திருமறைக் காடரிடம் அன்னை வேத நாயகி வினவினாள்.

தென்முக நம்பி உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகி முன்ஜென்மத்தில் விருபாக்ஷ புரி எனும் நகரில் கணிகையர் குடியில் பிறந்தாள். இளமையில், தன்னுடன் விரும்பிப் பழகிய ஒரு நவரத்தின வணிகருடன் வாழ்ந்து வந்தாள். வணிகரின் கைப் பொருளைக் கவர்ந்திடும் பேராசையால், அவனை உணவில் விஷமிட்டுக் கொன்றாள். முதுமையில், தொழுநோயால் இவ்வுலகைப் பிரிந்தாள். "அந்தகூபம்' எனும் நரகத்தில் துன்பங்களை அனுபவித்துவிட்டு, கபிலபுரம் எனும் ஊரில் ஒரு வைசியக் குடும்பத்தில் பிறந்தாள். தன் மனதுக்கினிய மணவாளனின் கைத்தலம் பற்றினாள். திருமணம் முடிந்து சில காலத்திலேயே அவள் கணவன் ஒவ்வாமை நோயால் துயருற்றான். இல்லறம் கசந்தது. முன்ஜென்மத்தில் செய்த கொலைப் பாதகத்தின் பாவத்தால் இல்வாழ்க் கையே இருளடைந்து துன்பத்தில் உழல்கிறாள். அதற்குப் பரிகாரமாக சுக்கிரவாரத்தில் திருமணமான நுற்றெட்டுப் பெண்களுக்கு மஞ்சள் முதலான மங்களப் பொருட்களைத் தந்து பூஜித்தால், அவள் கணவன் நோய் நீங்கி சுகம் பெறுவான்.''

(வளரும்)

செல்: 63819 58636